அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். அதாவது எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததால் கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் நயினார் நாகேந்திரனுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியை சரியான முறையில் கையாள தெரியவில்லை என்றும் கூறினார். இதைத்தொடர்ந்து அவர் கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அவரிடம் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவீர்களா என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளர் என்றால் கண்டிப்பாக கூட்டணியில் இணைய மாட்டோம் என்று கூறிவிட்டார். பின்னர் விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் கண்டிப்பாக விஜய் தலைமையில் ஒரு புதிய கூட்டணி அமையும் என்றார். பின்னர் அந்த கூட்டணியில் நீங்கள் இணைவீர்களா என்ற கேள்விக்கு தற்போதைக்கு எனக்கு அதற்கு பதில் தெரியாது என்றார். மேலும் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிச்சயம் உண்டு என்றும் கூறினார்.