Coolie collection: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி ரஜினி நடித்த கூலி திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய ஹைப்பை உருவாக்கியது.ரஜினியோ மாஸ் ஹீரோ.. லோகேஷோ பக்கா ஆக்சன் படங்களை எடுப்பவர். ஏற்கனவே கமலை வைத்து விக்ரம், விஜய் வைத்து மாஸ்டர், லியோ ஆகிய படங்களை கொடுத்திருந்ததால் இந்த கூட்டணி பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. இதன் காரணமாக படம் ரிலீஸாவதற்கு முன்பு இப்படம் 500 கோடி வியாபாரத்தை தொட்டதாக செய்திகள் வெளியானது.
ஜெயிலர் திரைப்படம் 610 கோடி வசூல் செய்த நிலையில் எப்படியாவது கூலியில் 1000 கோடியை அடித்து விட வேண்டும் என கணக்கு போட்ட சன் பிக்சர்ஸ் இந்த படத்திலும் பல்வேறு மொழிகளில் இருந்து நடிகர்களை இறக்கியது. நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர் மற்றும் பாலிவுட்டிலிருந்து அமீர்கானை கூட்டி வந்து ஒரு கேமியோ வேடத்தில் நடிக்க வைத்தார்கள்.
ஆனால் கதை, திரைக்கதையில் கோட்டை விட்டார் லோகேஷ். எனவே இந்த படம் ரசிகர்களை பெரிய அளவில் ஈர்க்கவில்லை. படத்திற்கு நெகட்டிவான விமர்சனங்கள் வந்தது. இதன் காரணமாக முதல் மூன்று நாட்கள் நல்ல வசூலை பெற்றாலும் அதன் பின் படிப்படியாக வசூல் குறைந்து கொண்டே போனது
. ஆகஸ்ட் 14ம் தேதி இப்படம் வெளியான நிலையில் தற்போது பல தியேட்டர்களிலிருந்தும் கூலி படம் தூக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் இந்த படம் மொத்தமாக எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என தெரிந்து கொள்வோம்.
தமிழ்நாட்டில் இப்படம் 144.75 கோடி, ஆந்திராவில் 68.65 கோடி, கேரளாவில் 24.80 கோடி, கர்நாடகாவில் 40.20 கோடி, வட மாநிலங்களில் 45.50 கோடி மற்றும் வெளிநாடுகளில் 177.55 கோடி என மொத்தமாக இப்படம் 501.45 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதே லோகேஷ் இயக்கி விஜய் நடித்து வெளியான லியோ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 230 கோடி வசூல் செய்த நிலையில் கூலி படமோ 144 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.