விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால் திமுகவின் வாக்கு வங்கிக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை மதுரையில் கனிமொழி எம்பி பேட்டியளித்தார்.
தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற வரும் புத்தக கண்காட்சியில் திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள்.
0முன்னதாக புத்தக கண்காட்சி பார்வையிட்ட திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் "புத்தக வாசிப்பு களுக்காக தமிழகம் முழுவதும் புத்தக கண்காட்சிகள் நடைபெற்று வருகிறது, மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மதுரையில் மிகப்பெரிய நூலகத்தை அமைத்துள்ளார், இலக்கிய வாசிப்புகளை அதிகப்படுத்தும் நோக்கில் பல நிகழ்ச்சிகள் தமிழ்நாடு முழுக்க நடத்தப்பட்டு வருகிறது, ஆகவே, தமிழக அரசு மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்த பல்வேறு வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள், தமிழகத்தில் அண்ணா, பெரியார் இல்லாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது என்பதே நிரூபிக்கும் வண்ணம் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயின் பேச்சு அமைந்துள்ளது, விஜய்யின் அரசியல் பயணம் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை, விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால் திமுகவின் வாக்கு வங்கிக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை" என்றார்.