அமிலத்தன்மை என்பது ஒரு சாதாரண செரிமானம் (Digestion) தொடர்பான பிரச்சனை. இதற்கு பின்னால், புளிப்பு ஏப்பம், மார்பில் எரியும் உணர்வு, வாயில் புளிப்பு அல்லது கசப்பான சுவை, வயிற்றின் மேல் பகுதியில் வலி அல்லது குமட்டல் போன்றவையால் ஏற்படுகின்றன. இது அவ்வப்போது நமக்கு மிகப்பெரிய தொந்தரவாக அமைக்கிறது. நமது வயிற்றில் அமில ரிஃப்ளக்ஸ் ஏற்படும் போது, அதாவது வயிற்றில் அதிகப்படியான அமிலம் உற்பத்தியாகி, அது மீண்டும் உணவுக்குழாய்க்குள் வரத் தொடங்கும் போது, அமிலத்தன்மை பிரச்சனை ஏற்படுகிறது. பல நேரங்களில் பலரும் இந்த பிரச்சனையால் அவதிப்படுவார்கள். அதன்படி, பெரும்பாலும் உங்களுக்கு மார்பில் எரியும் உணர்வு, புளிப்பு ஏப்பம் அல்லது அமிலத்தன்மை (Acidity) போன்ற பிரச்சனைகள் இருந்தால், உங்கள் அன்றாட வழக்கத்தின் சில உணவு பழக்கவழக்கங்களை மாற்றினாலேபோதும், இந்த பிரச்சனையை சரிசெய்ய முடியும்.
வயிற்றில் அமிலத்தன்மை ஏன் ஏற்படுகிறது..?அதிகப்படியான கார மற்றும் கொழுப்பு உணவுகள் மற்றும் காலியாக இருக்கும்போது அமிலத்தன்மை ஏற்பட தொடங்குகிறது. இது தவிர, கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாக ஏற்படுகிறது. அதே நேரத்தில், சில மருந்துகளை உட்கொள்வது செரிமானத்தையும் கெடுக்கும், இதன் காரணமாக அமில ரிஃப்ளக்ஸ் தொடங்குகிறது. பலருக்கும் அறியாத ஒன்று என்றால் அதிகப்படியான மன அழுத்தமும், நம் வயிற்றி அமிலத்தன்மை பிரச்சனையை அதிகரிக்க செய்யும். அமிலத்தன்மை உண்டாக காரணம் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: மாரடைப்பா? வாயுத் தொல்லையா? எப்படி தெரிந்துகொள்வது?
அதிகமாக டீ மற்றும் காபி குடிப்பது:பலரும் தங்களது தினசரி வாழ்க்கையில் அதிகளவில் டீ அல்லது காபி போன்றவற்றை எடுத்து கொள்கிறார்கள். இது அமிலத்தன்மை பிரச்சனையை ஏற்படுத்தும். இதற்கு காரணம், டீ மற்றும் காபி உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும். இது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். எனவே, டீ அல்லது காபி குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
வேகமாக உணவை உண்ணும் பழக்கம்:உங்கள் உணவின் முழு பலனையும் பெற விரும்பினால், ஒவ்வொரு முறையும் ஒரு கைப்பிடி உணவையும் சரியான முறையில் மென்று முழுங்க வேண்டும். இன்றைய நவீன வாழ்க்கையில் பலரும் வேக வேகமாக உணவை எடுத்துக்கொள்ளும் பழக்கத்தை கொண்டுள்ளார்கள். இதன் காரணமாக, உணவு சரியாக ஜீரணமாகாது, அமிலத்தன்மை தவிர, வாயு மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளும் உங்களுக்கு ஏற்படலாம்.
காரமான-எண்ணெய் உணவுகள்:உங்களுக்கு காரமான எண்ணெய் உணவுகளை உண்ணும் பழக்கம் இருந்தால் அல்லது சாலையோர கடைகள் உள்ளிட்ட வெளியில் இருந்து அதிக உணவுகளை சாப்பிட்டால், அமிலத்தன்மை பிரச்சனை தொடர்ந்து நீடிக்கும். இந்தப் பழக்கத்தால், எடையும் அதிகரிக்கத் தொடங்குகிறது. இது உங்களை நோய்வாய்ப்படுத்தும்.
ALSO READ:உணவுடன் உடனுக்குடன் தண்ணீர்! செரிமானத்தை மெதுவாக்குமா..?
அமிலத்தன்மை பிரச்சனை ஏற்படாமல் தடுப்பது எப்படி..?காலை, மதியம், இரவு என எப்போது உணவு எடுத்து கொண்டாலும், சாப்பிட்ட பிறகு 5 முதல் 8 நிமிடங்கள் வரை சிறிது நேரம் நடக்க வேண்டும். இது சரியான செரிமானத்திற்கு உதவுகிறது. ஆனால், சாப்பிட்ட பிறகு உட்கார்ந்து அல்லது படுத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தால், அது அமிலத்தன்மையை ஏற்படுத்துகிறது.