சென்னை ராயப்பேட்டையில் ரேபிஸ் தாக்கி, சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் மீர்சாகிப்பேட்டை மார்கெட் அருகே முகமது நஸ்ருதினை தெருநாய் கடித்துள்ளது. உடனே ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ரேபிஸ் தொற்று அவரை தாக்கியிருப்பது உறுதியானதை அடுத்து தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்