கள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில், தனது மகளை பெற்ற தாயே, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக நினைத்து அடித்துக் கொன்ற சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் சபாஷ் பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மமதா. இவருக்கும், சித்திப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் திருமணமாகி சரண் (3), தனுஸ்ரீ (2) என 2 குழந்தைகள் இருந்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாமியாருடன் தகராறு ஏற்பட்டு, தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, தாய் வீட்டிற்கு மமதா சென்றுள்ளார். தாய் வீட்டிலேயே தொடர்ந்து 10 நாட்களாக வசித்து வந்த மமதாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பயாஸ் என்பவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. பயாஸ் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கள்ளக்காதல் ஜோடி உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் தனது 2 வயது மகளை மட்டும் தூக்கிக்கொண்டு கள்ளக்காதலனுடன் மமதா தாய் வீட்டிலிருந்தும் சென்று விட்டார். எங்கு தேடியும் மகள் கிடைக்காததால் இது குறித்து மமதாவின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இதற்கிடையே ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் நர்சாராவ் பேட்டையில் கள்ளக்காதலனுடன் மமதா இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அங்கு சென்று கள்ளக்காதல் ஜோடியை போலீசார் பிடித்தனர். ஆனால் குழந்தையை காணவில்லை. இது குறித்து விசாரித்த போது, உல்லாசம் அனுபவிக்க தனது மகள் தடையாக இருந்ததால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாய் மமதாவே குழந்தையை அடித்துக் கொன்று விட்டது தெரிய வந்தது.
மகளின் சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி எடுத்து வந்து யாருக்கும் தெரியாமல் புதைத்து விட்டதாக போலீசாரிடம் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?