பயணியை நடுரோட்டில் கன்னத்தில் அறைந்த ரிக்ஷா டிரைவர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
Dinamaalai September 16, 2025 01:48 PM


 

மத்தியப்பிரதேச மாநிலத்தில் சத்தர்பூர் மாவட்டத்தில்  அதிர்ச்சிகரமான சம்பவம்  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சத்தர்சால் ஸ்கொயர் பகுதியில்  நடந்த இந்த சம்பவத்தில், ரிக்ஷா டிரைவருக்கும், ஒரு பயணியுமான கேஷு சௌராசியாவுக்கும் இடையே கடு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அதே இடத்தில் டிரைவர், பயணியை கன்னத்தில் அறைந்தார். இது குறித்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   


இந்த சண்டை நடந்த போது  லீசார் அருகிலேயே இருந்த போதிலும், ரிக்ஷா டிரைவர் கேஷுவை நேரில் கன்னத்தில் அறைந்தனர். இது குறித்த  காட்சிகள் வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில்  வைரலாக பரவி வருகிறது.


பொதுமக்கள் மற்றும் சமூக வலைதளங்களில்  இதற்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. போலீசாரின் முன்னிலையில் பொதுமக்கள் மீதான இந்த வன்முறை நடவடிக்கைக்கு என்ன காரணம், அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை என்ன என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.