கிராண்ட் சுவிஸ் செஸ் தொடர்: மகளிர் பிரிவில் 02-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் வைஷாலி..!
Seithipunal Tamil September 16, 2025 01:48 PM

கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் தமிழக வீராங்கனை வைஷாலி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் மகளிர்செஸ்  பிரிவில் நம்பிக்கை நட்சத்திரமான கிராண்ட் மாஸ்டர் வைஷாலி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் 2026-இல் நடக்கும் கேண்டிடேட் தொடருக்கு வைஷாலி தகுதி பெற்றுள்ளார். உஸ்பெகிஸ்தானில் 'கிராண்ட் சுவிஸ்' செஸ் தொடர் நடந்தது. இதில் 'டாப்-2' இடம் பெறும் வீரர், வீராங்கனைகள், 2026-இல் நடக்கவுள்ள 'கேண்டிடேட்ஸ்' தொடரில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். 

அந்தவகையில், பெண்கள் பிரிவின் இறுதிச்சுற்றில், இந்தியாவின் செஸ் கிராண்ட் மாஸ்டரான வைஷாலி (24), சீனாவைச் சேர்ந்த டன் ஜோங்யியை எதிர்கொண்டார். 11 சுற்று முடிவில் 08 புள்ளிகள் பெற்று வைஷாலி சாம்பியன் ஆகியுள்ளார். இதன் மூலம் இந்த பட்டத்தை தொடர்ந்து இரண்டாவது முறை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இந்தியாவை சேர்ந்த கொனேரு ஹம்பி மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகியோர் ஏற்கனவே கேண்டிடேட் செஸ் தொடருக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் 03-வது நபராக வைஷாலியும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.