மாறிவரும் ஜில்லான வானிலைக்கு ஏதாவது ஒன்றை சூடாக சாப்பிட வேண்டும் என்று நினைப்போம். அந்தவகையில், ஆரோக்கியமான சூப் ஒன்றை தேடினால், ப்ரோக்கோலி சூப் உங்களுக்கு மிக சிறந்த ஒன்றாகும். ப்ரோக்கோலி (Broccoli) காலிஃபிளவர் போல இருந்தாலும், இதன் நிறம் பச்சை நிறமாக இருக்கும். இதில் நல்ல அளவு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின் கே மற்றும் கால்சியம் நிறைந்திருந்தால், எலும்பு ஆரோக்கியத்தை (Bone Strength) பராமரிக்கும். மேலும், இதில் ஆண்டி – ஆக்ஸிடண்ட்கலும், அழற்ஜி எதிர்ப்பு பண்புகளும் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சரியான செரிமானத்தை பராமரிக்கவும், சருமத்தை ஆரோக்கியமாகவும் மாற்ற உதவுகிறது. அதன்படி, ப்ரோக்கோலி சூப்பை எப்படி தயாரிக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: 10 நிமிடங்களில் செய்யக்கூடிய சூப்பர் டிஷ்! ஈஸியான சென்னா கீரை நெய் சாதம் ரெசிபி இதோ!
ப்ரோக்கோலி சூப்: தேவையான பொருட்கள்:ப்ரோக்கோலி – 300 கிராம்
தக்காளி – 3
உருளைக்கிழங்கு – 2
மிளகு – 8
கிராம்பு – 4
இஞ்சி – 1 அங்குல துண்டு
இலவங்கப்பட்டை – 1
வெண்ணெய் – 1 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி – கைப்பிடி அளவு
உப்பு – தேவையான அளவு
ALSO READ: மென்மையான சப்பாத்தி மேக்கிங் டிப்ஸ்.. பனீர் ஸ்டஃப்டு பரோட்டா ரெசிபியையும் தெரிஞ்சுக்கோங்க!
ப்ரொக்கோலி சூப் செய்வது எப்படி..?ப்ரோக்கோலியில் உள்ள சல்ஃபோராபேன் ஒரு சக்திவாய்ந்த கலவை ஆகும், இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவும். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியின் படி, சல்ஃபோராபேன் உடலில் உள்ள புற்றுநோய் உண்டாக்கும் நொதிகளை செயலிழக்கச் செய்து டிஎன்ஏ சேதமடைவதைத் தடுக்கிறது. ப்ரோக்கோலி நுரையீரல், மார்பகம், புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதில் குறிப்பாக பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ப்ரோக்கோலி இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அமெரிக்காவின் தேசிய இதயம், நுரையீரல் மற்றும் இரத்த நிறுவனத்தின் கூற்றுப்படி, ப்ரோக்கோலி போன்ற அதிக நார்ச்சத்துள்ள உணவு இதய நோய் அபாயத்தை 20-25% குறைக்கும்.