தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடி சைவ, வைணவ சமயங்களை ஒப்பிட்டு பெண்களை இழிவாக பேசியதையடுத்து எழுந்த சர்ச்சையில், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.
இந்த வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறிய நீதிமன்றம், “பொன்முடிக்கு எதிராக தனிநபர் புகார் தாக்கல் செய்யலாம். காவல்துறை நடவடிக்கையை எதிர்த்து, சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்” என அறிவித்தது.
மேலும், பொன்முடி பொறுப்பான பதவியில் இருந்தவராக இருந்தபோதும், இவ்விதமான விமர்சனங்களைத் தவிர்த்திருக்க வேண்டும் என்றும், காவல்துறையினரும் குறைந்தபட்சம் புகார் அளித்தவர்களிடம் நேரில் விசாரணை நடத்தியிருக்க வேண்டிய அவசியம் இருந்தது என்றும் நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது.