ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் அபுதாபி மைதானங்களில் நடைபெற்று வருகிறது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், UAE, ஓமன் அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் நான்கு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் களமிறங்கியுள்ளன. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் UAE அணிகளை எதிர்கொண்டு இரண்டிலும் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஓமன் இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் UAE அணிகள் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி என சம நிலையில் உள்ளன. இன்றைய போட்டியில் மோதும் இவ்விரு அணிகளுக்கும் வெற்றி பெறுவது மட்டுமே தொடரில் நீடிக்க உதவும். எனவே இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் உயிர்-மரணப் போட்டியாக மாறியுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு சமீபத்தில் UAE, ஆப்கானிஸ்தான் அணிகளுடன் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அனுபவம் நம்பிக்கையளிக்கிறது. அதே சமயம், UAE அணி தங்களது சொந்த மைதானத்தில் விளையாடும் முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணியின் தொடக்க ஜோடிகளான அலிஷன் ஷரஃபு மற்றும் கேப்டன் முகமது வாசீம் சிறப்பாக ரன்கள் சேர்த்தால் பாகிஸ்தானுக்கு கடின சவாலாக மாறும்.
இதனால், இன்று நடைபெறும் பாகிஸ்தான் – UAE ஆட்டம், சூப்பர் 4 சுற்றுக்கான முக்கிய தகுதி ஆட்டமாக மட்டுமாக அமையும்.