தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் சிறுநீரக மற்றும் உணவுக்குழாய் பாதிப்பு காரணமாக காலமானது திரைத்துறையை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
“>
இவரது திடீர் மறைவிற்கு நடிகரும், மக்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பதிவில் அவர், “ரோபோ என்பது புனைப்பெயர் தான், என் அகராதியில் நீ மனிதன், ஆதலால் என் தம்பி. போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா? நீ போனாய், என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே” என மனம் நெகிழ்ந்து குறிப்பிட்டுள்ளார்.