Fahadh Faasil: மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஃபகத் பாசில். இவர் மலையாளம் மற்றும் தமிழில் பல திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பாசிலின் மகன் ஆவார்.
இவர் முதன்முதலாக சினிமாவில் நடிக்க வந்த போது ‘நடிப்பு ஒன்றும் வரவில்லை’ என இவரை ட்ரோல் செய்தார்கள். எனவே நடிப்பை விட்டுவிட்டு வெளிநாட்டுக்கு போனார். அங்கு படிப்போடு சேர்ந்து சரியான முறையில் நடிப்பு பயிற்சியும் எடுத்து அதன்பின் மீண்டும் நடிக்க துவங்கி கைத்தட்டல் வாங்கினார்.
தனது உருவத்திற்கு ஏற்ற வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து பேர் வாங்குவது இவரின் ஸ்டைல், Trance, JoJi, Kumbalangi nights, Avesham உள்ளிட்ட பல படங்களிலும் அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார். தமிழில் வேலைக்காரன், வேட்டையன், மாமன்னன், மாரிசன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இதில் மாமன்னன் படத்தில் இவரின் நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தில் பகத் பாசில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். வடிவேலுவுடன் இணைந்து நடித்த மாரீசன் திரைப்படம் பெரிய வெற்றி படமாக அமையவில்லை. இந்நிலையில்தான் மலையாள சினிமா உலகில் பகத் பாசில் மீது புகார் எழுந்திருக்கிறது.
ஷூட்டிங் வரும் பகத் பாசில் ‘இன்னைக்கு எனக்கு மூட் சரி இல்லை. நாளைக்கு வரேன்’ என சொல்லிவிட்டு வீட்டுக்கு போய் விடுகிறாராம். மற்ற இயக்குனர்கள் படங்களில் மட்டுமல்லாமல் தான் தயாரிக்கும் படங்களிலும் அப்படித்தான் நடந்து கொள்கிறாராம். எனவே இவர் மீது இயக்குனர்கள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. கோலிவுட்ல நடிகர்கள் விஷால், சிம்பு ஆகியோர் மீது இப்படி புகார்கள் வந்ததுண்டு. தற்போது அந்த லிஸ்ட்டில் பகத் பாசிலும் சேர்ந்திருக்கிறார்.