தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் பிரபல நடிகர் விஜயின் இல்லத்தில் அதிரடி சம்பவம்.நேற்று மாலை, மர்மமாக வீட்டுக்குள் நுழைந்த இளைஞர், நேராக மொட்டை மாடியில் அமர்ந்துக் கொண்டார்.
அப்போது அங்கிருந்த பாதுகாப்பு காவலர்கள், அதிர்ச்சியடைந்து உடனே அவரை பிடித்து நீலாங்கரை காவலரிடம் ஒப்படைத்தனர்.இதுகுறித்த விசாரணையில் அவர், மதுராந்தகத்தை சேர்ந்த அருண் (24) என்பதும், கடந்த 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.
அதுமட்டுமின்றி, வேளச்சேரியில் இருக்கும் சித்தி வீட்டில் வசித்து வந்த இவர், "விஜயை நேரில் பார்க்க வேண்டும்" என்ற ஆசையால் வீட்டுக்குள் நுழைந்ததாக காவலரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், விஜயின் வீட்டின் பாதுகாப்பை மீறி வாலிபர் உள்ளே சென்றது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.