இன்று அமராவதி அணையில் நீர் திறப்பு... 47,117 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி!
Dinamaalai September 20, 2025 03:48 AM

 

இன்று அமராவதி அணையில் பாசனத்திற்காக நீர் திறக்கப்பட உள்ள நிலையில், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள மொத்தம் 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இது குறித்து நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தைச் சார்ந்த 10 அமராவதி பழைய வாய்க்கால்களின் பாசனப் பகுதிகளில் மொத்தம் 21,867 ஏக்கர் நிலங்களுக்கு, அமராவதி அணையின் ஆற்று மதகு வழியாக வினாடிக்கு 700 கன அடி வீதம் 4233.60 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், திருப்பூர் மாவட்டம், அமராவதி புதிய பாசனப் பகுதிகளில் மொத்தம் 25,250 ஏக்கர் நிலங்களுக்கு,

அமராவதி பிராதனக் கால்வாய் வழியாக வினாடிக்கு 440 கன அடி வீதம் 2661.12 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், 19.09.2025 (இன்று) முதல் 31.01.2026 வரையிலான காலத்தில் மொத்தம் 134 நாட்களில், 70 நாட்கள் தண்ணீர் திறப்பு, 64 நாட்கள் தண்ணீர் நிறுத்தம் என்ற அடிப்படையில், மொத்தம் 6894.72 மில்லியன் கன அடிக்கு மிகாமல், அமராவதி அணையிலிருந்து, பாசனத்திற்காக, தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள மொத்தம் 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.