அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உலகளவில் மட்டும் ரூ.230 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்குவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், 1990களில் முன்னணி நடிகையாக பிரபலமான மகேஸ்வரி, நடிகர் அஜித்தை பற்றிய ஒரு சுவாரஸ்ய அனுபவத்தை பகிர்ந்து, இணையத்தில் வைரலாகி வருகிறார்.
1997ல் வெளியான நேசம், உல்லாசம் படங்களில் அஜித்திற்கு ஜோடியாக நடித்த மகேஸ்வரி, அப்போது அஜித்தின் மீது கிரஷ் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். ஜெகபதி பாபுவின் டாக் ஷோவில் பேசிய அவர்,“அஜித் என்றால் ரொம்ப பிடிக்கும். அவர் மீது பயங்கர கிரஷ். கடைசி நாள் சூட்டிங்கின் போது இனிமேல் அஜித்தை பார்க்க முடியாதே என்று கவலையாக இருந்தேன்.
அப்போது அஜித் வந்து ‘மகி, நீ எனக்கு தங்கச்சி மாதிரி. உனக்கு வாழ்க்கையில் ஏதாவது தேவைப்பட்டால் என்னை அழை, நான் உனக்காக வருவேன்’ என்று சொன்னார். அதை கேட்டதும் என் மனசே உடைந்து போனது”என்று உணர்ச்சிகரமாக தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வைக் கேட்ட நடிகை மீனா, சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிட்டார். மகேஸ்வரி – மீனா இருவரும் நெருங்கிய தோழிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.