TVK: விஜய் வீட்டின் மாடியில் புகுந்த இளைஞர்; பலத்த பாதுகாப்பை மீறி சென்றது எப்படி? -போலீசார் விசாரணை
Vikatan September 20, 2025 05:48 AM

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் நீலாங்கரை வீட்டில் மொட்டை மாடியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் இருந்துள்ளார்.

பலத்த பாதுகாப்பையும் மீறி, மாடியில் இளைஞர் ஒருவர் அமர்ந்திருந்ததைப் பார்த்து விஜய் வீட்டில் வேலை செய்யும் நபர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விஜய் வீட்டில் வேலை செய்பவர்கள், உடனடியாக அந்த இளைஞர் குறித்து நீலாங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தவெக தலைவர் விஜய்

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நீலாங்கரை போலீசார் தவெக தலைவர் விஜய் வீட்டின் மொட்டை மாடியில் இருந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், மதுராந்தகத்தைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் அருண் (24) என்பதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அவரை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் (IMH) நீலாங்கரை போலீசார் சேர்த்தனர்.

இவ்வளவு பாதுகாப்புகளையும் மீறி விஜய் வீட்டின் மொட்டை மாடிக்கு அவர் எப்படி சென்றார்? யார் கண்ணிலும் படாமல் எப்படி சென்றார் என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

TVK Vijay: ``ஜனநாயக போருக்கு தயாராக மக்களை பார்க்க வந்துள்ளேன்; திருச்சி திருப்புமுனை..'' - விஜய்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.