சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்கிற அதிர்ச்சி தகவலை மர்ம நபர் ஒருவர் மிரட்டல் மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார்.
இதனால் நீதிமன்ற வளாகத்தில் பதட்டம் நிலவியது.அதுமட்டுமின்றி, சென்னை கடற்கரை ரெயில் நிலையம் அருகே உள்ள சுங்கத் துறை தலைமை அலுவலகத்திற்கும் அதேபோல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் அறிந்த காவலர்கள் இரு இடங்களிலும் விரைந்து சென்று வெடிகுண்டு நிபுணர் படை மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு இருந்த பணியாளர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேற்றி பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டது.மேலும், ஒரே நாளில் சென்னை உயர்நீதிமன்றத்திலும், சுங்கத் துறை அலுவலகமும் வெடிகுண்டு மிரட்டலால் அதிர்ந்திருப்பது, அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.