என் மகனை அமெரிக்க போலீஸ் சுட்டு கொன்னுட்டாங்க…. உண்மையான காரணம் தெரியல?….. மத்திய அரசிடம் உதவி கேட்ட பெற்றோர்….!!!!
SeithiSolai Tamil September 20, 2025 01:48 AM

அமெரிக்க நாட்டின் கலி போர்னியாவில் தன் அறை நண்பருடன் நடந்த தகராறில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த முகமது நிஜாமுதீன் என்ற வாலிபர் காவல்துறையினரால் சுட்டு கொலைப்பட்டார். இந்நிலையில் தன் மகனின் உடலை வீட்டுக்கு கொண்டு வர மத்திய அரசானது உதவ வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு எழுதியிருந்த கடிதத்தில் இருப்பதாவது, என் மகன் நிஜாமுதீன் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய உடல் சாண்டா கிளாராவிலுள்ள ஒரு மருத்துவமனையில் இருக்கிறது. இதற்கிடையில் காவல்துறையினர் என் மகனை சுட்டுக் கொன்றதற்கான உண்மையான காரணம் தனக்கு தெரியவில்லை. ஆகவே என் மகனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.