நாம செத்தால் நம்மோடு பணம் வராது!… நண்பர்களிடம் சொன்ன ரோபோ சங்கர்!…
CineReporters Tamil September 20, 2025 01:48 AM
கலை நிகழ்ச்சிகளில் துவங்கிய கலைப் பயணம்:

Robo Shankar: மதுரையை சேர்ந்த ரோபோ சங்கர் அங்கு பல கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்து வாய்ப்புகள் தேடி அது நடக்காமல் போக விஜய் டிவி பக்கம் சென்று கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். நடிகர்களைப் போல பேசி மிமிக்ரி செய்வது நடிகர்களைப் போல டான்ஸ் மிமிக்ரி செய்வது ஆகியவை இவரின் தனி சிறப்பு.

விஜயகாந்த் படத்தில் அறிமுகம்:

விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளுக்கும் ஜட்ஜாக இருந்திருக்கிறார். விஜயகாந்த் படம் ஒன்றில் அறிமுகமான ரோபோ சங்கர் விஸ்வாசம், மாரி, புலி, கோப்ரா, வேலைக்காரன், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

#image_title

ரோபோ சங்கருக்கு மது அருந்த பழக்கம் இருந்தது. அதன் காரணமாக மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டு சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் சிகிச்சையால் மீண்டார். அதன் பின்னர் அவர் மது அருந்துவில்லை என்று அவரின் உறவினர்கள் சொல்கிறார்கள்.

கை விடாத மதுப்பழக்கம்:

சிலரோ அவர் மது அருந்தும் பழக்கத்தை விடவில்லை எனவும் சொல்கிறார்கள். இந்நிலையில்தான் உடல் நலம் பாதிக்கப்பட்டு நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோபோ சங்கர் நேற்று இரவு 9 மணி அளவில் மரணம் அடைந்தார். இவரின் உடலுக்கு தனுஷ், சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

பணம் கூட வராது:

ரோபோ சங்கருக்கு 500 ரூபாய் நோட்டுகள் நிரப்பப்பட்ட பண மாலை அனுபவித்த சண்டை பயிற்சியாளர் ராமு செய்தியாளர்களிடம் பேசிய போது ‘சினிமாவில் நான் நிறைய கஷ்டத்தில் இருந்தபோது அண்ணன்தான் எனக்கு நடிகர் சங்க கார்டு வாங்கி கொடுத்தார். நிறைய பேருக்கு பணம் கொடுத்து உதவி இருக்கிறார். அது பற்றி கேட்டால் ‘நாம் செத்தால் நம்மோடு பணம் வராது .. ஆனால் ஆயிரம் பேர் வருவார்கள்’ என சொல்லுவார். அதனால்தான் அவருக்கு பணமாலை அணிவித்தேன்’ என பேசி இருக்கிறார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.