கோடீஸ்வரர்கள் அதிகம் வாழும் மாநிலங்கள் பட்டியல்.. தமிழகத்திற்கு எந்த இடம்?
Webdunia Tamil September 21, 2025 03:48 AM

இந்திய செல்வந்தர்கள் குறித்த 2025-ஆம் ஆண்டு அறிக்கைப்படி, கோடீஸ்வரக் குடும்பங்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

மெர்சிடிஸ்-பென்ஸ் மற்றும் ஹூரூன் இணைந்து வெளியிட்ட இந்த அறிக்கை நாட்டில் கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதை காட்டுகிறது. ரூ.8.5 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட குடும்பங்கள் 8 லட்சத்து 71 ஆயிரமாக உயர்ந்துள்ளன.

2017-ல், இந்தியாவில் வெறும் 1.6 லட்சம் கோடீஸ்வர குடும்பங்களே இருந்தன. 2021-ல் அது 4.58 லட்சமாக உயர்ந்தது. தற்போது கிட்டத்தட்ட 9 லட்சம் குடும்பங்களைத் தொட்டுள்ளது.

இந்த கோடீஸ்வரக் குடும்பங்கள் அதிக அளவில் வாழும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அங்கு 1,78,600 கோடீஸ்வர குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த பட்டியலில், தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதற்கு இது ஒரு முக்கிய சான்றாக கருதப்படுகிறது.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.