rahul gandhi
மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, தேர்தல் ஆணையத்துடன் இணைந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் வயநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "வாக்கு திருட்டு குறித்து இந்தியாவில் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில், ஒரு 'ஹைட்ரஜன் குண்டை' வெடிக்க வைப்பேன்" என்று கூறினார். மேலும், "அது யதார்த்தத்தை முற்றிலுமாக சிதைத்து, வாக்கு திருட்டுக்கு மேலும் ஆதாரங்களை வழங்கும். நாங்கள் ஆதாரங்கள் இல்லாமல் எதையும் கூறவில்லை; எங்களிடம் 100% ஆதாரங்கள் உள்ளன. அவை விரைவில் வெளிவரப் போகின்றன" என்று தெரிவித்தார்.
கர்நாடகாவின் ஆலந்த் சட்டமன்றத் தொகுதியில் நடந்த வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் குறித்து சிஐடி விசாரித்து வருவதை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, சிஐடி கேட்கும் தகவல்களை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஏன் வழங்க மறுக்கிறார் என்று கேள்வி எழுப்பினார். ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மீது இதைவிட பெரிய குற்றச்சாட்டு எதுவும் இருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
Edited by Mahendran