டெல்லியில் நடந்த இந்த சந்திப்பில், NDA கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் பல லாக்கள், பல டிமாண்ட்கள் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலில், பிரிந்துவிட்ட அதிமுக தலைவர்களை — டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்களை — மீண்டும் NDA கூட்டணியில் இணைக்க வேண்டும் என அமித் ஷா பரிந்துரைத்திருக்கிறார். ஆனால், இதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். “அவர்கள் மீது துரோகம் செய்தவர்கள் என்று நான் மக்களிடம் பேசி இருக்கிறேன். இப்போது அவர்களை கூட்டணியில் சேர்த்தால், அவர்களுக்காக நான் எப்படி வாக்கு கேட்பது?” என்று EPS வாதிட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலாக, அமித் ஷா, “அனைவரும் ஒன்று சேராமல் முழு வெற்றி சாத்தியமில்லை. BJP கோட்டாவின் மூலம் அவர்களுக்கு சீட்டுகளை ஒதுக்கலாம். அதிமுகவுக்கு தனியாக சீட்டுகள் உண்டு. அதில் நீங்கள் போட்டியிடலாம்” என்று லாக் வைத்திருக்கிறார்.
ஆனால், அதிரடியான அரசியல் பந்து வீச்சு அடுத்ததாக வந்தது. “இப்படி ஒருங்கிணைந்த கூட்டணி வந்தால், EPS முதலமைச்சர் வேட்பாளர் ஆகக் கூடாது. இல்லையெனில் தினகரன் வர மாட்டார். இதை ஏற்கிறீர்களா?” என்ற அமித் ஷாவின் கேள்விதான் EPS அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக தகவல்.
இந்த பேச்சுவார்த்தையில் எந்தத் தெளிவான முடிவும் எடுக்கப்படவில்லை. “பின்னால் பார்த்துக் கொள்கிறோம்” எனச் சொல்லி அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், பாஜகவின் கணக்கு மிகவும் தெளிவாக இருக்கிறது.
அவர்கள் விரும்புவது — அதிக தொகுதிகள் அல்ல, வெற்றிகரமான தொகுதிகள். உதாரணமாக, 50 சீட் கொடுத்து அதில் தோல்வி அடைவதை விட, 30 சீட்டுகளை கொடுத்தாலும், அதில் பெரும்பான்மையைக் கைப்பற்ற வேண்டும் என்பதே பாஜகவின் திட்டம்.
இதன் மூலம், அதிக எம்எல்ஏக்களை வெற்றி பெறச் செய்து, தமிழக சட்டமன்றத்தில் NDA வலுவான நிலையைப் பெற வேண்டும் என்பதே பாஜகவின் இலக்கு. ஒருவேளை தொங்கு சட்டமன்றம் என்ற சூழ்நிலை வந்தால், அதிமுக அரசு அமைத்தாலும், அதில் பாஜகவுக்கு அமைச்சரவை பங்கு கிடைக்க வேண்டும் என்பதே அவர்களின் பிளான்.
இல்லையெனில், வலுவான எதிர்க்கட்சியாக இருந்தாலும், அதனை “NDA-வின் வெற்றி” என மக்களிடம் முன்வைக்க முடியும்.நீண்ட கணக்கில், பாஜகவின் நோக்கம் தெளிவாக இருக்கிறது:2026 தேர்தல் — திமுக vs அதிமுக கூட்டணி என்ற நிலையை மாற்றி, திமுக vs NDA கூட்டணி என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
இதன் மூலம் 2029, 2031 தேர்தல்களிலும் நேரடி போட்டியாக திமுகவும் பாஜகவுமே தமிழ்நாட்டில் மோத வேண்டும் என்பதே கமலாலய வட்டாரத்தின் நீண்டகால அரசியல் கணக்கு.