தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனது கெரியரை ஆரம்பித்து இன்று ஒரு ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் சந்தானம். விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் மக்களை சிரிக்க வைத்த சந்தானம் அதன் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். அதுவும் சிம்புதான் இவரை முதன் முதலில் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து சிம்பு படங்களில் சிம்புவுக்கு நண்பனாக நடித்து காமெடியில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தார் சந்தானம். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என அனைத்து நடிகர்களுடனும் நடித்து அவர்களுக்கு இணையான புகழை பெற்றார். இவரின் கவுண்டர் காமெடி மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. குறிப்பாக உதய நிதி, ஜீவா இவர்களுடான சந்தானத்தின் காம்போ இன்று வரை ரசிக்குமபடியான காம்போவாகவே பார்க்கப்படுகிறது.
இப்படி காமெடியில் ஓஹோனு வந்த சந்தானம் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு ஹீரோவாக நடிக்க வேண்டும் என முடிவெடுத்து இன்று வரை ஹீரோவாகவே நடித்து வருகிறார்.கிட்டத்தட்ட 20 படங்களுக்கும் மேல் அவர் ஹீரோவாகவே நடித்துவிட்டார். ஆனால் சமீபகாலமாக அவர் ஹீரோவாக நடித்த படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன் அவர் காமெடியனாக நடித்த மதகஜராஜா படம் கடந்த வருடம் வெளியாகி மீண்டும் காமெடிக்கே வாங்க சந்தானம் என்று ரசிகர்களை சொல்ல வைத்தது. அதுமட்டுமில்லாமல் சம்பளம் எவ்வளவு கேட்டாலும் தருகிறோம் என்று பல தயாரிப்பாளர்கள் சொல்லியும் அவர் காமெடியனாக நடிக்க மறுத்துவிட்டார். இதற்கிடையில் சிம்பு படத்தில் மீண்டும் சந்தானம் நடிப்பதாக சொல்லி அதற்கான பூஜையும் போடப்பட்டது.
அதில் காமெடியனாக நடித்தாலும் சிம்புவுக்கு இணையான டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்ற வகையில் அவர் கமிட்டாகியிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில் இயக்குனர் ராஜேஷ் மீண்டும் ஜீவாவை வைத்து ஒரு படம் இயக்க போகிறார் என்றும் அது சிவா மனசுல சக்தி 2 படமாகத்தான் இருக்கும் என்று சொல்லப்பட்டது. சிவா மனசுல சக்தி படத்தை பொறுத்தவரைக்கும் சந்தானம் இல்லைனா அதன் இரண்டாம் பாகமே சாத்தியப்படாது.
ஆனால் அந்தப் படத்திற்கு சந்தானத்தை எவ்வளவு நடிக்க டிரை பண்ணியும் அது நடக்கவில்லையாம். கேமியோ ரோலிலாவது நடிக்க வைக்கலாம் என்று முயற்சித்திருக்கிறார்கள். அதுவும் வொர்க் அவுட் ஆகவில்லை. கடைசியில் அந்தப் படத்தின் தலைப்பை ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ என மாற்றியிருக்கிறார்களாம்.