தற்போது கேபிஒய் பாலா பேசு பொருளாக மாறியுள்ளார். அவரால் பயனடைந்தவர்கள் ஏராளம். யாருக்கு எந்த நேரத்தில் உதவி வேண்டுமானாலும் ஓடி வந்து உதவி செய்து விடுகிறார் பாலா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தன் முகத்தை காட்டிய பாலா இன்று வரை லைம் லைட்டில் இருக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்த பாலா அந்த நிகழ்ச்சிக்கு பிறகுதான் மக்களிடையே பிரபலமானார்.
அதை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல், படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து இன்று காந்தி கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். படம் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்று வருகிறது. ஷெரிஃப் அந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இருந்தாலும் காந்தி கண்ணாடி படத்தில் பிரதமரை இழிவு படுத்தும் காட்சிகள் இருப்பதாக சிவசேனா கட்சியினர் பாலா மீதும் படக்குழு மீதும் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்கள்.
சந்தேகத்தை ஏற்படுத்தும் பின்னணி:இன்னொரு பக்கம் சமூக வலைதளங்களில் பாலா செய்யும் உதவிகள் பற்றியும் பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. அதாவது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்களே இந்தளவு உதவியை செய்வதில்லை. ஆனால் பாலாவுக்கு என எந்தவொரு பெரிய பின்னணியும் கிடையாது. அவரால் எப்படி ஆம்புலன்ஸ், ஹாஸ்பிட்டல் என அடுத்தடுத்து உதவிகளை செய்கிறார் என்ற வகையில் அவர் மீது சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார்கள்.
அவருக்கு பின்னணியில் இருந்து ஒரு சில பேர் பாலாவை ஆட்டுவிக்கிறார்கள் என்றும் அவர் ஒரு கைக்கூலியாகத்தான் செயல்படுகிறார் என்றும் பாலா மீது சர்ச்சைகள் இருக்கின்றன. இதற்கு பாலாவும் இன்ஸ்டாவில் பதிலுக்கு ஒரு வீடியோவை போட்டு விளக்கம் கொடுத்திருந்தார். அதாவது நான் கைக்கூலி இல்லை. சாதாரணத் தினக்கூலிதான். விளம்பரங்களில் நடிக்கிறேன்,
பாலா செய்த ஒரே தவறு:படங்களில் நடிக்கிறேன், வெளி நாட்டு கச்சேரிகளுக்கு செல்கிறேன், ஆங்கரிங் செய்கிறேன், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறேன். இதன் மூலம் வரும் சம்பளத்தை வைத்துதான் இந்த உதவிகளை செய்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார் பாலா. இதற்கிடையில் பாலா செய்த ஒரே தவறு என்னவெனில் அவர் உதவிகளை செய்யும் போது கேமிராவையும் சேர்த்து பின்னாடி கொண்டு போனதுதான்.
அதை வைத்தும் சில பேர் பாலா மீது பழி போடுகிறார்கள். அதாவது உண்மையா உதவி செய்கிறவன் எவனும் கேமிராவை தூக்கிக்கொண்டு செல்ல மாட்டான் என்றும் பாலாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதில் ஒரு வகையில் நியாயம் இருந்தாலும் இன்று பல முன்னணி நடிகர்கள் பலர் செய்கிற உதவி வெளியில் தெரிவதில்லை. அவர்கள் பப்ளிசிட்டியும் பண்ண விரும்பவில்லை. அப்படி பாலா செய்துவிட்டு சென்றிருக்கலாம்.
மயில்சாமி டெக்னிக்:ஏன் மயில்சாமி. அவர் பெரிய முன்னணி நகைச்சுவை நடிகரும் கிடையாது. பிறருக்கு உதவுவதல் மனிதாபிமானமாக பார்க்கப்பட்டாலும் அதன் பின்னணியில் இருக்கக் கூடிய அரசியல் மற்றும் மோசடியை வைத்தே சந்தேகத்தை எழுப்பி விடுகிறார்கள். இதில் மயில்சாமி உயிருடன் இருந்தவரைக்கும் அவர் கையில் இருந்த பணத்தை பகிர்ந்து கொண்டு பல உதவிகளை செய்தார்.
ஆனால் அதை என்றைக்குமே அவர் விளம்பரப்படுத்தியது கிடையாது. ஏன் அவரால் உதவிபெற்றவர்களின் முகம் கூட யாருக்குமே தெரியாது. அவருக்கு பிறகு அவருடன் பயணித்த நடிகர்கள் மூலமாகத்தான் மயில்சாமி என்னெல்லாம் உதவிகள் செய்தார் என்றே தெரிய வந்தது. இந்த டெக்னிக்கை கூட பாலா பின்பற்றியிருந்தால் இந்தளவுக்கு பிரச்சினையில் சிக்கியிருக்க மாட்டார் என்பதுதான் பொதுவான கருத்தாக பார்க்கப்படுகிறது.