சென்னைக்கு கூடுதல் குடிநீர் வழங்கும் புதிய திட்டத்தை செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்வை முன்னிட்டு, காரில் ரோடு ஷோவாக செம்பரம்பாக்கம் பயணித்த முதலமைச்சருக்கு, சாலையின் இருபுறமும் குவிந்திருந்த தொண்டர்கள் உற்சாகக் கைத்தட்டல்களும், ஆர்ப்பரிக்கும் கோஷங்களும் எழுப்பி உளமாற வரவேற்பளித்தனர்.
மேலும்,மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், செம்பரம்பாக்கம் நிலையத்திலிருந்து நாள்தோறும் 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் இந்த திட்டம், நகரின் நீர்விநியோகத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது.