அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் இளைஞர் ஒருவர் ஆற்றில் படகில் சென்றிருந்தார். அப்போது, கருப்பு நிற பெரிய முதலையை எதிர்கொள்கிறார். அது அவரை நோக்கி அருகே சென்றதும், பயப்படாமல் அதன் வாய் பகுதியில் அந்த இளைஞர் முத்தமிடுவதை காணமுடிகிறது. ஆபத்து நிறைந்த இந்த செயலை அச்சமின்றி அவர் செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on InstagramA post shared by Dannie nini (@cajundan2)
இதனையடுத்து முதலை சாப்பிடுவதற்கு வெள்ளை நிற இனிப்பு கட்டிகளை கொடுக்கிறார். அதனை சாப்பிட்டதும் அது அமைதியாகி விடுகிறது. அதன் வாய் பகுதியை பிடித்தும், கால் மற்றும் வால் பகுதியை பிடித்து மசாஜ் செய்து விடுகிறார். இது குறித்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ 2.28 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். எனினும், அது ஆபத்திற்குரிய செயல். இதனை செய்ய வேண்டாம். நெட்டிசன்களில் பலர் இதனை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?