தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராகி இருந்து வருபவர் ஹெச். வினோத் (H. Vinoth). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு (Thunivu) என பல்வேறு படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் திரைப்படங்களாக அமைந்துள்ளது. அந்த படங்களின் வரிசையில் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) கடைசி படமாக கூறப்படும் ஜன நாயகன் (Jana Nayagan) படமானது, மிக பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே(Pooja Hegde) நடித்துள்ளார். தளபதி விஜய்யின் இந்த படமானது, கடந்த 2024 ஆம் ஆண்டு இறுதியில் தளபதி 69 என அறிவிக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங்கும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்று வந்தது.
ஜன நாயகன் படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்திருக்கும் நிலையில், வரும் 2026 ஆண்டு ஜனவரி 09ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இயக்குநர் ஹெச்.வினோத் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்தார். அதில் அவர், “ஜன நாயகன் படமானது மாஸ், ஆக்ஷ்ன் மற்றும் கமர்ஷியல் ஃபிளேவரில் உருவாகியிருப்பதாக” அப்டேட் கொடுத்துள்ளார். இது குறித்து விவரமாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : விஜய் ஆண்டனியின் ‘சக்தித் திருமகன்’ படம் எப்படி இருக்கு? வெளியான ‘எக்ஸ்’ விமர்சனம்
ஜன நாயகன் படம் பற்றி இயக்குநர் ஹெச்.வினோத் கொடுத்த அப்டேட்அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஹெச். வினோத், “ஜன நாயகன் படமானது தளபதி விஜய் சாரின் பக்கா ஃபேர்வெல் திரைப்படம். இந்த படமானது மாஸ், கமர்ஷியல் மற்றும் ஆக்ஷ்ன் என மூன்று ஃபிளேவரில் உருவாகியுள்ளது. இது கம்ப்ளீட் மீல்ஸ் படமாக இருக்கும், விஜய் சாரின் பக்கா ஃபேர்வெல் படமாக இந்த ஜன நாயகன் இருக்கும்” என இயக்குநர் ஹெச்.வினோத் அந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க : வின்டேஜ் கதையில் கார்த்தி.. விறுவிறுப்பாக உருவாகும் மார்ஷல்!
ஜன நாயகன் படம் குறித்து பேசிய ஹெச்.வினோத் வீடியோ பதிவுஜன நாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய நிறுவனம்“#JanaNayagan is a pakka farewell film for #ThalapathyVijay packed with mass, action & full on commercial flavour♥️🔥. Complete Meals ah irukum😎”
– #HVinoth pic.twitter.com/lPzosWn9Z8— AmuthaBharathi (@CinemaWithAB)
தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாக ஜன நாயகன் உருவாகியிருக்கும் நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் கே.வி.என். ப்ரொடக்ஷன் நிறுவனமானது இப்படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
இப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் 3 மாதங்களுக்கு மேல் இருக்கும் நிலையில், படத்தின் அப்டேட்டுகள் தெடர்ந்து வெளியாகிவருகிறது. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனமானது வாங்கியுள்ளதாம். சுமார் ரூ 170 கோடிகளுக்கு மேல் கொடுத்து வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.