சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்ட அவர் இன்று இரண்டாவது கட்டமாக நாகை மற்றும் திருவாரூரில் பிரச்சாரம் செய்கிறார்.
இந்த நிலையில், இன்று பிற்பகல் தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிராரத்தை தொடங்கினார். திருச்சி, அரியலூர் போலவே நாகப்பட்டினத்திலும் ரசிகர்கள், தொண்டர்களில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
அதன் படி நாகப்பட்டினம் பயணத்தை முடித்துக்கொண்டு திருவாரூர் கிளம்பிய விஜய்க்கு அங்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இந்த நிலையில், திருவாரூரில் விஜய் பரப்புரை செய்யவுள்ள பகுதியில் கோவில் கோபுரத்தின் மீது தவெகவினர் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே காவல்துறையினர் தவெகவினரை கோயில் கோபுரத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.