அனைத்து மத்திய, மாநில திட்டங்களுக்கும் முக்கிய அடையாள ஆவணமாக மாறியுள்ள ஆதார் அட்டையைப் புதுப்பிக்க தேவையான கட்டணத்தில் விரைவில் மாற்றம் ஏற்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, முகவரி மாற்றம், புகைப்படம் மற்றும் பிற விவரங்களைத் திருத்தும் சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்படும் என கூறப்படுகிறது. தற்போது முகவரி மாற்ற சேவைக்கான கட்டணம் ரூ.50 இருக்க, இது வரும் அக்டோபர் 1 முதல் ரூ.75 ஆக உயர வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல், புகைப்படம் உள்ளிட்ட பிற புதுப்பிப்பு சேவைகளுக்கான கட்டணமும் ரூ.100ல் இருந்து ரூ.125 ஆக உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது. இது குறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை. இருந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய ஆண்டுகளிலும் இத்தகைய கட்டண மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததால், தற்போது வெளியான தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது. ஆகையால், ஆதார் புதுப்பிப்பு தேவைப்படுவோர், மாற்றத்திற்கு முன்பாகவே கட்டணத்தை கவனிக்கும்படி அறிவுறுத்துகின்றனர்.