நாளுக்கு நாள் தங்கம் விலை அதிரடி மாற்றத்தை சந்தித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் தங்கம் வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். தினமும் தங்கத்தின் விலை நிலவரத்தைக் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில், இன்றைய விலை நிலவரம் குறித்து காண்போம்.
நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.10,230-க்கும், ஒரு சவரன் ரூ. 81,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதாவது கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,290-க்கும் சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 82,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராம் ஒன்று 145 ரூபாய்க்கும் சவரன் ஒன்று 145000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.