குற்றாலம் பழைய குற்றால அருவியில் இனி காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவித்துள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பழைய குற்றால அருவி செல்லும் சாலை மற்றும் பழைய குற்றால அருவியை சுற்றி உள்ள பகுதிகளில் சமீபகாலமாக வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதாக தெரியவந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு இப்பகுதியில் கரடி ஒன்று நடந்த சென்ற வீடியோ வெளியானது.இதை தொடர்ந்து மக்களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட வன அதிகாரி ராஜ்மோகன் இதற்காங் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கு முன்பு பழைய குற்றால அருவியில் காலை 6:00 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது..