சமூக வலைதளத்தில் வெளியான ஒரு காணொளியில், பாரம்பரிய உணவுகளால் உடல் ஆரோக்கியத்தைப் பேணலாம் என்றும், குறிப்பாக மூலிகை அல்வா மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால், இதற்கு பதிலளித்த மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப், மது அதிகம் அருந்தினால் கல்லீரல் பாதிப்பு நிச்சயம் என்றும், எந்த பாரம்பரிய உணவும் அதை முழுமையாக தடுக்க முடியாது என்றும் தெளிவாகக் கூறினார். பாரம்பரிய உணவுகள் நார்ச்சத்து, மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் போன்றவற்றை வழங்கி உடலுக்கு நன்மை அளிக்கின்றன, ஆனால் அவை நோய்களை உடனடியாக குணப்படுத்தும் என்று நம்புவது தவறு என்று அவர் விளக்கினார்.
View this post on InstagramA post shared by Dr Santhosh Jacob MBBS,DNB,MCh,DABRM,PhD (@drsanthoshjacob)
மேலும், பாண்டிச்சேரி அருகே ஆவாரம் பூவைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், ஆவாரம் பூ சாப்பிடுவோருக்கு சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பு குறைவது கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இருப்பினும், ஆவாரம் பூவை பொடியாக அரைத்து உட்கொள்ள வேண்டும், மேலும் சர்க்கரை நோய்க்கு மருந்து எடுப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே இதைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, உணவுடன் உடற்பயிற்சி, குழந்தைகளுடன் நேரம் செலவிடுதல், மகிழ்ச்சியான மனநிலை ஆகியவை முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.