நள்ளிரவில் திடீர் நிலநடுக்கம்... வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள்!
Dinamaalai September 24, 2025 11:48 PM

அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தில் இன்று அதிகாலை 3 மணிக்கு திடீர்  நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  பெர்க்லே நகரின் தென் கிழக்கு பகுதியில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. அதிகாலை நேரம் என்பதால், நிலநடுக்கம் ஏற்பட்டபோது தூக்கத்தில் இருந்த பலர் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.  இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் உயிரிழப்புகள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.  

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.