கிராம நிர்வாக அலுவலகம் முன்பு தீக்குளித்த பெண் தலையாரி சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்த நிலையில், இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே கெஞ்சம்பட்டியை சேர்ந்தவர் சங்கிலி முருகன். இவர் டி.குன்னத்தூரில் கிராம தலையாரியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சோனியா (34). இவர் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள செங்குளத்தில் தலையாரியாக வேலை பார்த்தார். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது.
கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் சங்கிலி முருகன் வீட்டிற்கு செல்லாமல், தனது தங்கையின் வீட்டுக்கு சென்று விட்டார். கணவரை வீட்டுக்கு வருமாறு சோனியா அழைத்த நிலையில், சங்கிலி முருகன் மறுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 19ம் தேதி டி.குன்னத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்ற சோனியா, அங்கு அலுவலகத்தில் இருந்த கணவர் சங்கிலி முருகனை தன்னுடன் வீட்டுக்கு வருமாறு மீண்டும் அழைத்துள்ளார். அப்போதும் அவர் மறுத்ததாக தெரிகிறது.
கணவர் தன்னை தொடர்ந்து நிராகரித்ததால் தான் கொண்டு சென்ற பெட்ரோலை தனது உடலில் ஊற்றி சோனியா தீ வைத்துக் கொண்டார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?