ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் தீபாவளி போனஸ் ஆக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது 10.9 லட்சம் ஊழியர்களுக்குப் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக்கூட்டத்தில், ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க முடிவு செய்யப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இதே அளவு போனஸ் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டும் அது தொடர்வது ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு, அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த போனஸ் தொகையானது ₹1,866 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, ரயில்வே ஊழியர்களுக்கு பண்டிகை காலங்களில் நிதி ரீதியான ஆதரவை அளிப்பதுடன், அவர்களின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகவும் பார்க்கப்படுகிறது. இதன் மூலம், ரயில்வே ஊழியர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Edited by Mahendran