சமீப காலமாகவே அரசு அலுவலகங்கள், பொது இடங்கள் என்று அனைத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதும், அவை சோதனைக்கு பின் புரளி என்பதும் தெரிய வருகிறது.
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு நேற்று இரவு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் மோப்பநாய் உதவியுடன் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.
அந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.