ரோட்டுக்கடையில் வாழைப்பழம் சாப்பிட்ட நபர் உயிரிழப்பு - நடந்தது என்ன?
Seithipunal Tamil September 25, 2025 05:48 AM

சமீப காலமாக நாம் உண்ணக்கூடிய பழங்கள் தொண்டையில் சிக்கி பலியாவது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு மாவட்டம் பெந்தியடக்கா அருகே பாருடக்கா பகுதியை சேர்ந்தவர் விஷாந்த் டிசோசா என்பவர் சாலையோர உணவகத்தில் ஆம்லேட் உடன் வாழைப்பழத்தை முழுமையாக சாப்பிட்டு உள்ளார். 

ஆனால், சிறிது நேரத்தில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு காசர்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அந்த நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உயிரிழந்த நபர் தொண்டையில் ஆம்லேட், வாழைப்பழம் சிக்கியதால் இறந்ததாக தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.