ரூ.5,000 ரொக்க பரிசுடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ஏலக்காய், முந்திரி பருப்பு, வேட்டி மற்றும் சேலை ஆகியவையும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு, பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்க பரிசு இடம்பெறவில்லை. நிதி பற்றாக்குறை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். இது பொதுமக்கள் மத்தியிலும், எதிர்க்கட்சிகள் மத்தியிலும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த ஆண்டு மீண்டும் ரொக்க பரிசுடன் கூடிய பொங்கல் தொகுப்பை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த பொங்கல் பரிசு அறிவிப்பு, வாக்குகளை கவரும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
அரிசி மற்றும் சர்க்கரை ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த பொங்கல் பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடையாளத்திற்காக மட்டும் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இந்த ரொக்க பரிசு வழங்கப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீபாவளி பண்டிகையின் போது வெளியிடுவார் என்று தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.