Breaking: ஜெட் வேகத்தில் தங்கம் விலை!… ” ரூ.280 உயர்ந்தது – சவரன் ரூ. 95,000 -ஐ நெருங்கியது” பண்டிகை பருவத்தில் சவரன் விலை மீண்டும் உயர்வு..!!!
SeithiSolai Tamil October 15, 2025 11:48 PM

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.15) மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது.

கடந்த சில நாட்களாக ஏற்றத் தாழ்வுடன் காணப்பட்ட நிலையில், இன்று திடீரென ஒரு கிராம் 22 கேரட் ரூ.11,860-க்கு விற்பனையாகிறது. அதன்படி ஒரு பவுன் விலை ரூ.280 உயர்ந்து ரூ.94,880 ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச தங்க சந்தையில் விலை உயர்ந்ததும், இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததும் இந்த விலை உயர்விற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. தீபாவளியை முன்னிட்டு ஆபரணங்கள் வாங்க திட்டமிட்டிருக்கும் பொதுமக்களுக்கு இந்த விலை உயர்வு கூடுதல் சுமையாக அமைந்துள்ளது. இதன் காரணமாக, தங்க சந்தையில் ஒரு அதிர்ச்சி நிலை உருவாகியுள்ளது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.