நடிகர் ஹரிஷ் கல்யாண், தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்துவரும் இளம் நட்சத்திரம். ‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ போன்ற வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களின் மனதில் தனித்த இடம் பிடித்தவர். தற்போது அவர் நடித்து வரும் புதிய படம் ‘டீசல்’, இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகியுள்ளது.
இதில் அவருக்கு இணையாக அதுல்யா ரவி நடித்துள்ளார்.இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. மேலும், தீபாவளி பண்டிகை சிறப்பாக, அக்டோபர் 17ஆம் தேதி “டீசல்” திரைப்படம் திரைக்கு வருகிறது.ஆனால், இந்த வெளியீட்டைச் சுற்றி ஹரிஷ் கல்யாண் சிறிது ஆதங்கத்துடனும் நெகிழ்ச்சியுடனும் கருத்து தெரிவித்துள்ளார்.
இதில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது,"இது தான் எனது படம் தீபாவளிக்கு வெளியாகும் முதல் முறை. சந்தோஷம்தான், ஆனாலும் சில விமர்சனங்கள் மனதைப் புண்படுத்துகின்றன.அதிலும் சிலர் என் தயாரிப்பாளர்களிடம் ‘டீசல் படம் தீபாவளிக்கு வர என்ன தகுதி இருக்கு? பெரிய ஹீரோ இல்ல, பெரிய டைரக்டர் இல்ல..."என்று கேட்கிறார்கள்.
ஒரு படம் பண்டிகைக்கு வெளியாவதற்கு ‘தகுதி’ என்ற அளவுகோல் இருக்க வேண்டுமா? நல்ல கதை, நல்ல நடிப்பு, நல்ல குழு இருந்தால் அதுவே தகுதி அல்லவா?”.அவரது இந்த உணர்ச்சிப்பூர்வமான உரை, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.