அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பரிந்துரையின்படி காஸாவில் போர் நிறுத்தம் நிலவத் தொடங்கியுள்ளது. இஸ்ரேலும் ஹமாஸும் அமைதி ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்து, இருதரப்பிலும் பிணைக்கைதிகள் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது. இதுவரை ஹமாஸ் பிடித்துச் சென்ற 20 உயிருள்ள பிணைக்கைதிகள் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக இஸ்ரேலிய தரப்பிலிருந்து பல பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், உயிரிழந்த 28 பிணைக்கைதிகளின் உடல்களையும் இஸ்ரேல் ஒப்படைக்கச் சொல்லியுள்ளது. இதற்குள் ஹமாஸ் 8 உடல்களை அனுப்பி விட்டது. இதில் ஒரு நேபாளி, ஆறு இஸ்ரேலியர்கள் உட்பட மொத்தம் 8 உடல்கள் உள்ளன. ஆனால், ஒன்றின் அடையாளம் பிணைக்கைதியோடு பொருந்தவில்லை என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. முழுத் தடயவியல் பரிசோதனை முடிவில் அந்த உடல் பணயக்கைதிகளில் யாருடனும் தொடர்பில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய இராணுவம், தவறான உடலை அனுப்புவது தவிர்க்கப்பட வேண்டும் என ஹமாஸை எச்சரித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்க போர் நிறுத்தத்தின் போது முந்தைய உடல்கள் திருப்பி அனுப்பப்பட்டாலும், அவற்றில் ஒன்று பாலஸ்தீன பெண் என தவறான அடையாளம் காணப்பட்டதையும், பின்னர் உண்மையான உடல் சரிபார்க்கப்பட்டதையும் குறிப்பிடுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?