சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில், இன்று 22 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், அடையார், மயிலாப்பூர், எம்.ஆர்.சி. நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், லேசானது முதல் மிதமான மழை நாள் முழுவதும் பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edited by Siva