இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வீடியோவில், ஒரு இளைஞர் சோபாவில் இருந்து திடீரென எழுந்து, பேனைத் தொட முயல்கிறார். ஆனால் அதற்குள் மயங்கி கீழே விழுந்துவிடுகிறார். இதைப் பார்ப்பவர்கள், பேனைத் தொட்டதால் மின்சாரம் தாக்கியது போல் நினைக்கலாம். ஆனால் உண்மையில் அப்படி இல்லை என்று மருத்துவர் சரண் விளக்கியுள்ளார். நீண்ட நேரம் படுத்திருந்தால், உடலில் ரத்தம் சமமாக இருக்கும். திடீரென எழுந்தால், ரத்தம் எல்லாம் கால்களுக்குச் சென்றுவிடும். அது இதயத்துக்குத் திரும்ப வேண்டும், ஆனால் கை உயர்த்தி பேனைத் தொட முயலும்போது ரத்த ஓட்டம் தடைபடும். இதனால் மூளைக்கு போதிய ரத்தம் கிடைக்காமல் மயக்கம் வரும்.
View this post on InstagramA post shared by Dr Charan J C (@drcharanjc)
இது வயதானவர்களுக்கு அதிகம் நடக்கும், ஏனெனில் அவர்கள் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்து எழுந்தால் ரத்த அழுத்தம் குறைந்து தலைச்சுற்றல் வரலாம். ஆனால் இளைஞர்களுக்கும் இது பொருந்தும். இதைத் தடுக்க, நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால் கால்களை அடிக்கடி ஸ்ட்ரெச் செய்ய வேண்டும் அல்லது நகர வேண்டும். ரத்தம் வேகமாக இதயத்துக்குச் செல்ல இது உதவும். அனைவரும் இதைப் பின்பற்றினால் மயக்கம் வராமல் தடுக்கலாம்.