சுங்கச்சாவடிகளில் அசுத்த கழிப்பறைகள் தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1,000 பாஸ்டேக் ரீசார்ஜ்!
Dinamaalai October 16, 2025 02:48 AM

 

தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகள் பாஸ்டேக் முறையில் சுங்கக்கட்டணம் செலுத்துகின்றனர். சுங்கச்சாவடிகளில் பயணிகள் பயன்படுத்த இலவச டாய்லட் வசதி இருக்கிறதே. ஆனால் பல இடங்களில் அந்த கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன.

இந்த பிரச்சினையைச் சமாளிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய தீர்வு எடுத்துள்ளது. அக்டோபர் 31 வரை செல்லும் இந்த திட்டத்தின் கீழ், அசுத்த கழிப்பறைகள் தொடர்பாக தகவல் அளித்த பயணிகளுக்கு ரூ.1,000 பாஸ்டேக் ரீசார்ஜ் வழங்கப்படும். தகவல் அளிப்பவர்கள் ‘ராஜ் மார்க் யாத்ரா’ செயலியை பதிவிறக்கம் செய்து, பெயர், வாகன பதிவு எண், சுங்கச்சாவடி இடம், மொபைல் எண் மற்றும் கழிப்பறை புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த தகவல்களை ஆய்வு செய்த பிறகு, சம்பந்தப்பட்ட பயணியின் பாஸ்டேக் கணக்கில் ரூ.1,000 ரீசார்ஜ் செய்யப்படும். தேசிய நெடுஞ்சாலைத் துறை இதனை ஒரு சிறப்பு தூய்மை பிரசாரமாகத் தொடங்கியுள்ளது, இதன் மூலம் நாடு முழுவதிலும் சுங்கச்சாவடிகளின் கழிப்பறைகள் பராமரிக்கப்படுவதாக உறுதி செய்யப்படவுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.