மகாராஷ்டிராவில் நக்சல் இயக்கத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ரூ.6 கோடி பரிசு அறிவிக்கப்பட்டிருந்த முக்கிய தளபதி மல்லோஜுலா வேணுகோபால் ராவ் என்கிற பூபதி (70), தனது 60 ஆதரவாளர்களுடன் சரணடைந்தார். இவர், 2011ல் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட நக்சல் தலைவர் கிஷண்ஜியின் சகோதரர் ஆவார். இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியின் மத்தியக் குழு மற்றும் பொலிட்பீரோ உறுப்பினராக இருந்த பூபதி, தெலங்கானாவைச் சேர்ந்த பி.காம் பட்டதாரி. சோனு தாத்தா, மாஸ்டர், அபய் உள்ளிட்ட பல புனைப்பெயர்களால் அடையாளம் காணப்பட்ட இவர், தண்டேவாடா தாக்குதலில் 76 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தின் மூளையாகக் கருதப்பட்டார்.
அவரது சரணடைவுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. முதலில், நக்சல் இயக்கம் மக்கள் ஆதரவை இழந்து தோல்வியடைந்து வருவதும், உயிரிழப்புகள் அதிகரித்ததாலும் அவர் ஆயுதப் போராட்டத்தின் மீது நம்பிக்கையை இழந்தார். மேலும், கடந்த மே மாதம் பொதுச் செயலாளர் பசவராஜு இறந்தபின் அந்தப் பதவி தனக்குக் கிடைக்காமல் தேவுஜிக்கு வழங்கப்பட்டதும் அவருக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இரண்டாவதாக, மகாராஷ்டிரா சி-60 கமாண்டோக்களின் தொடர்ச்சியான என்கவுன்டர்கள் காரணமாக கட்சிரோலி, அபுஜ்மத் பகுதிகளில் பதுங்க முடியாத நிலை ஏற்பட்டது. உயிர் அச்சம், உடல் சோர்வு மற்றும் அரசின் மறுவாழ்வு கொள்கையில் ஏற்பட்ட நம்பிக்கை ஆகியவை பூபதியின் சரணடைவிற்கு வழிவகுத்தன. முன்னாள் தோழர் ஒருவர் எழுதிய உணர்ச்சி மிகுந்த கடிதமும் அவரை இந்த முக்கிய முடிவை எடுக்கத் தூண்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?