சென்னையின் தாம்பரம் அருகே குரோம்பேட்டை பகுதியில் ஏற்பட்ட கொடூர சம்பவத்தில் சிவலிங்கம் என்பவர் தன் மகன் நிரோஷன் கையால் கத்திமுயற்சியில் பரிதாபமாக உயிரிழந்தார். பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிரோஷன், தந்தையை திருமணம் செய்து வைக்கத் தொடர்ந்து கோபம் கொண்டிருந்ததாக தெரிகிறது.
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக நேற்று காலை பெங்களூருவில் இருந்து குரோம்பேட்டை வந்த நிரோஷன் தந்தையிடம் , மீண்டும் தகராறு செய்ததாக தெரிகிறது. நிரோஷன் முதல் மாடியில் உள்ள படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்த தந்தையை வயிற்றில் குத்தியுள்ளார்.இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த சிவலிங்கம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்
இச்சம்பவம் குறித்து தகவலின் பேரில் காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து சிவலிங்கின் உடலை பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. அத்துடன் அவரது மகன் நிரோஷனை கைது செய்து தீவிர விசாரணை செய்ய ஆரம்பித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?