சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க அரசு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என திக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் சாதி ஆணவக் கொலைகளை தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி KN.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான வழிகள் குறித்து ஆராய்ந்து அரசுக்கு உரிய பரிந்துரைகளை வழங்குவதற்காக, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் இந்த ஆணையம் அமைக்கப்படுகிறது. இந்த ஆணையத்தில் சட்ட வல்லுநர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள் மற்றும் மாற்றுவியல் அறிஞர்கள் இடம்பெறுவார்கள். இந்த ஆணையம் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துகளை பெற்று, ஆணவப் படுகொலைகளைத் தடுக்கத் தேவையான உறுதியான பரிந்துரைகளை தமிழக அரசுக்கு வழங்கும். ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்தச் சமூகக் கொடுமையைத் தடுப்பதற்கெனத் தமிழக அரசு உறுதியான புதிய சட்டங்களை இயற்றும் என்றும் முதலமைச்சர் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை சட்டமன்றத்தில் அறிவித்து, சமூகத்தில் ஒருவரை கொல்வதை ஏற்க முடியாது என்பதையும் வலியுறுத்தினார். இது அரசின் சாதி ஆணவக் கொலைகளை எதிர்கொள்ளும் முக்கியமான முன்னேற்றமாகும்.