பஞ்சாப் மாநிலம் பதேகர் பகுதியை சேர்ந்த ஆகாஷ்பட்டா என்ற இரும்பு பொருள் வியாபாரி, ரோபர் ரேஞ்சின் டி.ஐ.ஜி. ஹர்சரண்சிங் புல்லர் (IPS) மீது சி.பி.ஐ.யிடம் லஞ்ச புகார் அளித்தார்.அவரது புகாரில், “பொய்யான வழக்கில் சிக்க வைத்த டி.ஐ.ஜி. ஹர்சரண்சிங் புல்லர், வழக்கை முடிக்க ரூ.8 லட்சம் லஞ்சம் கேட்டார்” என்று கூறியிருந்தார்.
புகாரை உறுதிப்படுத்த, சி.பி.ஐ. அதிகாரிகள் பூசல் வீடியோ திட்டம் அமைத்து, ஆகாஷ்பட்டாவிடம் பணம் கொடுத்து அனுப்பினர். அதன்படி, அவர் பணத்தை வழங்கியவுடன், சி.பி.ஐ. குழுவினர் ஹர்சரண்சிங் புல்லரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.பின்னர் அவரை சி.பி.ஐ. அலுவலகத்துக்குக் கொண்டு சென்று தடவியல் விசாரணை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, புல்லரின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் கிடைத்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது,"
ரூ.5 கோடிக்கு மேற்பட்ட ரொக்கப்பணம்
1.5 கிலோ தங்க நகைகள்
22 உயர்தர கைக்கடிகாரங்கள்
மெர்சிடீஸ் & ஆடி கார்கள்
லாக்கர் சாவிகள், 40 லிட்டர் வெளிநாட்டு மதுபானங்கள்
இரட்டை குழல் துப்பாக்கி, ரிவால்வர், ஏர்கண் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மேலும், விசாரணையில், புல்லருக்கு கிருஷ்ணா என்ற இடைத்தரகர் உதவி செய்தது தெரியவந்தது. பின்னர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.21 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், கைதான ஹர்சரண்சிங் புல்லர், 2009ஆம் ஆண்டு IPS அதிகாரி ஆவார். இவர் பல முக்கிய பதவிகளில் பணியாற்றியதுடன், போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் மற்றும் அகாலிதளம் தலைவர் பிக்ரம்சிங் மஜிதியா தொடர்பான விசாரணைகளிலும் முக்கிய பங்கு வகித்தவர்.அவரது தந்தை எம்.எஸ். புல்லர், பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் டிஜிபி ஆவார். தற்போது லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட ஹர்சரண்சிங் புல்லர் மற்றும் கிருஷ்ணா இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.