சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று (அக்.18) சற்று குறைந்துள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், தங்க விலை குறைந்திருப்பது நகை வாங்கத் திட்டமிட்டு இருந்த மக்களுக்கு சிறிய நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரே நாளில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,000 வரை குறைந்து, ஒரு சவரன் ரூ.95,600-க்கும், ஒரு கிராம் ரூ.11,950-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் தொடர் உயர்வில் இருந்த தங்க விலை திடீரென குறைந்திருப்பதால், பண்டிகை கால நகை விற்பனையில் ஊக்கத்தை உருவாக்கும் என வணிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.